கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
Karumam Seyaoruvan Kaidhooven Ennum
Perumaiyin Peetutaiyadhu Il
Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand
மு. வரதராசனார்குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையாவீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செயல் செய்யாமல் விடமாட்டேன் என மன உறுதிகொள்ளும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது
English explanationThere is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti
The manly act and knowledge full, when these combineIn deed prolonged, then lengthens out the race's line
மு. வரதராசனார்முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
சாலமன் பாப்பையாமுயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்
English explanationOne's family is raised by untiring perseverance in both effort and wise contrivances
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam
Matidhatruth Thaanmun Thurum
'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way
மு. வரதராசனார்என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையாஎன் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
மு. கருணாநிதி (கலைஞர்)தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்
English explanationThe Deity will clothe itself and appear before him who resolves on raising his family
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
Soozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith
Thaazhaadhu Ugnatru Pavarkku
Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gain
மு. வரதராசனார்தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
சாலமன் பாப்பையாதன் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஆக வேண்டிய செயலை விரைந்து செய்பவருக்கு அச்செயலைச் செய்து முடிக்கும் திறம் அவர் நினைக்காமலே கிடைக்கும்.
மு. கருணாநிதி (கலைஞர்)தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்
English explanationThose who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeed
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
Kutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich
Chutramaach Chutrum Ulaku
With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claim
மு. வரதராசனார்குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.
சாலமன் பாப்பையாதவறானவற்றைச் செய்யாமல் தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்து வாழ்பவனை உயர்ந்தோர் தம் சுற்றமாக ஏற்பர்.
மு. கருணாநிதி (கலைஞர்)குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்
English explanationPeople will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha
Illaanmai Aakkik Kolal
Of virtuous manliness the world accords the praiseTo him who gives his powers, the house from which he sprang to raise
மு. வரதராசனார்ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
சாலமன் பாப்பையாஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ.
மு. கருணாநிதி (கலைஞர்)நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்
English explanationA man's true manliness consists in making himself the head and benefactor of his family
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
Amarakaththu Vankannar Polath Thamarakaththum
Aatruvaar Metre Porai
The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strong
மு. வரதராசனார்போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
சாலமன் பாப்பையாபோர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.
மு. கருணாநிதி (கலைஞர்)போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு
English explanationAmid his kindred so the burthen rests upon the strong
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
Kutiseyvaark Killai Paruvam Matiseydhu
Maanang Karudhak Ketum
Wait for no season, when you would your house uprear;'Twill perish, if you wait supine, or hold your honour dear
மு. வரதராசனார்குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
சாலமன் பாப்பையாதன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்
English explanationAs a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their family
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
Itumpaikke Kolkalam Kollo Kutumpaththaik
Kutra Maraippaan Utampu
Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every ill
மு. வரதராசனார்தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
சாலமன் பாப்பையாதன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?
மு. கருணாநிதி (கலைஞர்)தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்
English explanationIs it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
Itukkankaal Kondrita Veezhum Atuththoondrum
Nallaal Ilaadha Kuti
When trouble the foundation saps the house must fall, If no strong hand be nigh to prop the tottering wall
மு. வரதராசனார்துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
சாலமன் பாப்பையாதுன்பம் வரும் போது முட்டுக் கொடுத்துத் தாங்கும் நல்ல பிள்ளைகள் இல்லாத வீடும், நாடும் துன்பமாகிய கோடாரி அடிப்பகுதியை வெட்டச் சாயும் மரம் போல் விழுந்து விடும்.
மு. கருணாநிதி (கலைஞர்)வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்
English explanationIf there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune