காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
Kaamam Uzhandhu Varundhinaarkku Emam
Matalalladhu Illai Vali
To those who 've proved love's joy, and now afflicted mourn, Except the helpful 'horse of palm', no other strength remains
மு. வரதராசனார்காமத்தால் துன்புற்று (காதலின் அன்பு பெறாமல்) வருந்தினவர்க்குக் காவல் மடலூர்தல் அல்லாமல் வலிமையானத் துணை வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையாகாதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)காதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை
English explanationTo those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
Nonaa Utampum Uyirum Matalerum
Naaninai Neekki Niruththu
My body and my soul, that can no more endure, Will lay reserve aside, and mount the 'horse of palm'
மு. வரதராசனார்(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.
சாலமன் பாப்பையாகாதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.
மு. கருணாநிதி (கலைஞர்)எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்
English explanationHaving got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal
I once retained reserve and seemly manliness; To-day I nought possess but lovers' 'horse of palm'
மு. வரதராசனார்நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.
சாலமன் பாப்பையாநாணமும் ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன்; இன்றோ காதலர் ஏறும் மடலைப் பெற்றிருகிறேன்.
மு. கருணாநிதி (கலைஞர்)நல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்
English explanationModesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
Kaamak Katumpunal Uykkum Naanotu
Nallaanmai Ennum Punai
Love's rushing tide will sweep away the raftOf seemly manliness and shame combined
மு. வரதராசனார்நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
சாலமன் பாப்பையாஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
மு. கருணாநிதி (கலைஞர்)காதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது
English explanationThe raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar
The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventide
மு. வரதராசனார்மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
சாலமன் பாப்பையாமாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
மு. கருணாநிதி (கலைஞர்)மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்
English explanationShe with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
Mataloordhal Yaamaththum Ulluven Mandra
Patalollaa Pedhaikken Kan
Of climbing 'horse of palm' in midnight hour, I think; My eyes know no repose for that same simple maid
மு. வரதராசனார்மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் உறுதியாக நினைக்கின்றேன், காதலியின் பிரிவின் காரணமாக என் கண்கள் உறங்காமல் இருக்கின்றன.
சாலமன் பாப்பையாஅவள் குணத்தை எண்ணி என் கண்கள் இரவெல்லாம் உறங்குவதில்லை. அதனால் நள்ளிரவிலும்கூட மடல் ஊர்வது பறிறயே எண்ணுவேன்.
மு. கருணாநிதி (கலைஞர்)காதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்
English explanationMine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
Katalanna Kaamam Uzhandhum Mataleraap
Pennin Perundhakka Thil
There's nought of greater worth than woman's long-enduring soul, Who, vexed by love like ocean waves, climbs not the 'horse of palm'
மு. வரதராசனார்கடல் போன்ற காமநோயால் வருந்தியும், மடலேறாமல் துன்பத்தை பொருத்துக் கொண்டிருக்கும் பெண் பிறப்பை போல் பெருமை உடைய பிறவி இல்லை.
சாலமன் பாப்பையாஅதுதான் அவள் பெருமை; கடல் போலக் கரையில்லாத காதல் நோயை அவளும் அனுபவித்தாலும் மடல் ஊராது பொறுத்திருக்கும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி இவ்வுலகத்தில் வேறு இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)கொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை
English explanationThere is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam
Maraiyirandhu Mandru Patum
In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicity
மு. வரதராசனார்இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.
சாலமன் பாப்பையாஇவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.
மு. கருணாநிதி (கலைஞர்)பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்
English explanationEven the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
Arikilaar Ellaarum Endreen Kaamam
Marukin Marukum Maruntu
'There's no one knows my heart,' so says my love, And thus, in public ways, perturbed will rove
மு. வரதராசனார்அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.
சாலமன் பாப்பையாஎன் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.
மு. கருணாநிதி (கலைஞர்)என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!
English explanationAnd thus, in public ways, perturbed will rove
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
Yaamkannin Kaana Nakupa Arivillaar
Yaampatta Thaampataa Aaru
Before my eyes the foolish make a mock of me, Because they ne'er endured the pangs I now must drie
மு. வரதராசனார்யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
சாலமன் பாப்பையாநான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
மு. கருணாநிதி (கலைஞர்)காதல் நோயினால் வாடுவோரின் துன்பத்தை அனுபவித்தறியாதவர்கள்தான், அந்த நோயினால் வருந்துவோரைப் பார்த்து நகைப்பார்கள்
English explanationEven strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered