நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira
I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain
மு. வரதராசனார்விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?
சாலமன் பாப்பையாஎன்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?
மு. கருணாநிதி (கலைஞர்)என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
English explanationI who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen
Menimel Oorum Pasappu
'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes
மு. வரதராசனார்அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
சாலமன் பாப்பையாஇந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
மு. கருணாநிதி (கலைஞர்)பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!
English explanationSallowness, as if proud of having been caused by him, would now ride on my person
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
Saayalum Naanum Avarkontaar Kaimmaaraa
Noyum Pasalaiyum Thandhu
Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he left
மு. வரதராசனார்காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சாலமன் பாப்பையாஅவர் என்னைப் பிரிகிறபோதே உள்ளத் துன்பத்தையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு அவற்றுக்கு ஈடாக என் அழகையும் வெட்கத்தையம் கொண்டு போய்விட்டார்.
மு. கருணாநிதி (கலைஞர்)காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்
English explanationHe has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu
I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray
மு. வரதராசனார்யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?
சாலமன் பாப்பையாநான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?
மு. கருணாநிதி (கலைஞர்)யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?
English explanationI think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
Uvakkaanem Kaadhalar Selvaar Ivakkaanen
Meni Pasappoor Vadhu
My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home
மு. வரதராசனார்அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.
சாலமன் பாப்பையாமுன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?
மு. கருணாநிதி (கலைஞர்)என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்
English explanationJust as my lover departed then, did not sallowness spread here on my person ?
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu
As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace
மு. வரதராசனார்விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
சாலமன் பாப்பையாவிளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)விளக்கின் ஒளிகுறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப்போல, இறுகத் தழுவிய காதலன்பிடி, சற்றுத் தளரும்போது காதலியின் உடலில் பசலைநிறம் படர்ந்து விடுகிறது
English explanationJust as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
Pullik Kitandhen Putaipeyarndhen Avvalavil
Allikkol Vatre Pasappu
I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me
மு. வரதராசனார்தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவி விட்டதே!
சாலமன் பாப்பையாமுன்னொரு சமயம் நான் அவரைத் தழுவிக் கிடந்தேன்; கொஞ்சம் விலகினேன்; அவ்வளவுதான்; இந்தப் பசலை என்னை அப்படியே அள்ளிக் கொள்வது போல் வந்துவிட்டது.
மு. கருணாநிதி (கலைஞர்)தழுவிக் கிடந்தேன்; சற்றுத் தள்ளிப் படுத்தேன்; அவ்வளவுதான்; என்னை அள்ளிக் கொண்டு விட்டதே பசலை நிறம்!
English explanationI who was in close embrace just turned aside and the moment I did so, sallowness came on me like something to be seized on
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il
On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'
மு. வரதராசனார்இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!
சாலமன் பாப்பையாஇங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே
English explanationBesides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin
Well let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain
மு. வரதராசனார்பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையாஇந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!
மு. கருணாநிதி (கலைஞர்)பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
English explanationIf he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin
'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain
மு. வரதராசனார்பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
சாலமன் பாப்பையாஎன்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
மு. கருணாநிதி (கலைஞர்)என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!
English explanationIt would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)