இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
Illai Thavaravarkku Aayinum Ootudhal Valladhu Avaralikku Maaru
Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move
மு. வரதராசனார் அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
மு. கருணாநிதி (கலைஞர்) எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது
English explanation Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
Ootalin Thondrum Sirudhuni Nallali Vaatinum Paatu Perum
My 'anger feigned' gives but a little pain; And when affection droops, it makes it bloom again
மு. வரதராசனார் ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
சாலமன் பாப்பையா ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
மு. கருணாநிதி (கலைஞர்) காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்
English explanation His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
Pulaththalin Puththelnaatu Unto Nilaththotu Neeriyain Thannaar Akaththu
Is there a bliss in any world more utterly divine, Than 'coyness' gives, when hearts as earth and water join
மு. வரதராசனார் நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ.
சாலமன் பாப்பையா நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?
மு. கருணாநிதி (கலைஞர்) நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?
English explanation Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
Pulli Vitaaap Pulaviyul Thondrumen Ullam Utaikkum Patai
'Within the anger feigned' that close love's tie doth bind, A weapon lurks, which quite breaks down my mind
மு. வரதராசனார் காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
மு. கருணாநிதி (கலைஞர்) இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது
English explanation In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol Akaralin Aangon Rutaiththu
Though free from fault, from loved one's tender armsTo be estranged a while hath its own special charms
மு. வரதராசனார் தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
சாலமன் பாப்பையா ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
மு. கருணாநிதி (கலைஞர்) தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது
English explanation Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
Unalinum Untadhu Aralinidhu Kaamam Punardhalin Ootal Inidhu
'Tis sweeter to digest your food than 'tis to eat; In love, than union's self is anger feigned more sweet
மு. வரதராசனார் உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
சாலமன் பாப்பையா உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
மு. கருணாநிதி (கலைஞர்) உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம் அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்
English explanation To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
Ootalil Thotravar Vendraar Adhumannum Kootalir Kaanap Patum
In lovers' quarrels, 'tis the one that first gives way, That in re-union's joy is seen to win the day
மு. வரதராசனார் ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
சாலமன் பாப்பையா ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
மு. கருணாநிதி (கலைஞர்) ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார் இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்
English explanation Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
Ootip Perukuvam Kollo Nudhalveyarppak Kootalil Thondriya Uppu
And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace
மு. வரதராசனார் நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.
சாலமன் பாப்பையா நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?
மு. கருணாநிதி (கலைஞர்) நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?
English explanation Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
Ootuka Manno Oliyizhai Yaamirappa Neetuka Manno Iraa
Let her, whose jewels brightly shine, aversion feignThat I may still plead on, O night, prolong thy reign
மு. வரதராசனார் காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
சாலமன் பாப்பையா ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
மு. கருணாநிதி (கலைஞர்) ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக
English explanation May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
Ootudhal Kaamaththirku Inpam Adharkinpam Kooti Muyangap Perin
A 'feigned aversion' coy to pleasure gives a zest; The pleasure's crowned when breast is clasped to breast
மு. வரதராசனார் காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
சாலமன் பாப்பையா காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
மு. கருணாநிதி (கலைஞர்) ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும் எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்
English explanation Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike