தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar
Theevinai Ennum Serukku
With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin
மு. வரதராசனார்தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
சாலமன் பாப்பையாதீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
மு. கருணாநிதி (கலைஞர்)தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்
English explanationThose who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
Theeyavai Theeya Payaththalaal Theeyavai
Theeyinum Anjap Patum
Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe
மு. வரதராசனார்தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.
சாலமன் பாப்பையாநமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
மு. கருணாநிதி (கலைஞர்)தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்
English explanationBecause evil produces evil, therefore should evil be feared more than fire
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
Arivinul Ellaan Thalaiyenpa Theeya
Seruvaarkkum Seyyaa Vital
Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
மு. வரதராசனார்தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.
சாலமன் பாப்பையாதனக்குத் தீமை செய்பவர்க்கும் தீமை செய்யாது இருப்பதே, அறிவில் எல்லாம் முதன்மை அறிவு என்று கூறுவர்.
மு. கருணாநிதி (கலைஞர்)தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்
English explanationSo shalt thou wisdom's highest law, 'tis said, fulfil
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
Marandhum Piranketu Soozharka Soozhin
Aranjoozham Soozhndhavan Ketu
Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall
மு. வரதராசனார்பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.
சாலமன் பாப்பையாமறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
மு. கருணாநிதி (கலைஞர்)மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்
English explanationEven though forgetfulness meditate not the ruin of another Virtue will meditate the ruin of him who thus meditates
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
Ilan Endru Theeyavai Seyyarka
Seyyin Ilanaakum Matrum Peyarththu
Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still
மு. வரதராசனார்யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
சாலமன் பாப்பையாதன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
மு. கருணாநிதி (கலைஞர்)வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
English explanationCommit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
Theeppaala Thaanpirarkan Seyyarka Noippaala
Thannai Atalventaa Thaan
What ranks as evil spare to do, if thou would'st shunAffliction sore through ill to thee by others done
மு. வரதராசனார்துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையாதுன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
மு. கருணாநிதி (கலைஞர்)வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்
English explanationLet him not do evil to others who desires not that sorrows should pursue him
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
Enaippakai Yutraarum Uyvar Vinaippakai
Veeyaadhu Pinsendru Atum
From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay
மு. வரதராசனார்எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.
சாலமன் பாப்பையாஎவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
மு. கருணாநிதி (கலைஞர்)ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்
English explanationHowever great be the enmity men have incurred they may still live The enmity of sin will incessantly pursue and kill
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
Theeyavai Seydhaar Ketudhal Nizhaldhannai
Veeyaadhu Atiurain Thatru
Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends
மு. வரதராசனார்தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையாபிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
மு. கருணாநிதி (கலைஞர்)ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டுத் தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்
English explanationDestruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal
Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near
மு. வரதராசனார்ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க வேண்டும்.
சாலமன் பாப்பையாதன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
மு. கருணாநிதி (கலைஞர்)தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது
English explanationIf a man love himself, let him not commit any sin however small
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Arungetan Enpadhu Arika Marungotith
Theevinai Seyyaan Enin
The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide
மு. வரதராசனார்ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையாதீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.
மு. கருணாநிதி (கலைஞர்)வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க
English explanationKnow ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path