கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
Karka Kasatarak Karpavai Katrapin
Nirka Adharkuth Thaka
So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain
மு. வரதராசனார்கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
சாலமன் பாப்பையாகற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.
மு. கருணாநிதி (கலைஞர்)பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும் கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்
English explanationLet a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
Ennenpa Enai Ezhuththenpa Ivvirantum
Kannenpa Vaazhum Uyirkku
The twain that lore of numbers and of letters giveAre eyes, the wise declare, to all on earth that live
மு. வரதராசனார்எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையாவாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.
மு. கருணாநிதி (கலைஞர்)எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்
English explanationLetters and numbers are the two eyes of man
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
Kannutaiyar Enpavar Katror Mukaththirantu
Punnutaiyar Kallaa Thavar
Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display
மு. வரதராசனார்கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
சாலமன் பாப்பையாகற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
மு. கருணாநிதி (கலைஞர்)கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்
English explanationThe learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
Uvappath Thalaikkooti Ullap Piridhal
Anaiththe Pulavar Thozhil
You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art
மு. வரதராசனார்மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையாமற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
மு. கருணாநிதி (கலைஞர்)மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்
English explanationIt is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
Utaiyaarmun Illaarpol Ekkatrung Katraar
Kataiyare Kallaa Thavar
With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place
மு. வரதராசனார்செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.
சாலமன் பாப்பையாசெல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.
மு. கருணாநிதி (கலைஞர்)அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்
English explanationThe unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu
In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow
மு. வரதராசனார்மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
சாலமன் பாப்பையாமணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்
English explanationWater will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
Yaadhaanum Naataamaal Ooraamaal Ennoruvan
Saandhunaiyung Kallaadha Vaaru
The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam
மு. வரதராசனார்கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
சாலமன் பாப்பையாகற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?
மு. கருணாநிதி (கலைஞர்)கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
English explanationHow is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
Orumaikkan Thaan Katra Kalvi
Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu
The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains
மு. வரதராசனார்ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையாஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் - எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
மு. கருணாநிதி (கலைஞர்)ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்
English explanationThe learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
Thaamin Puruvadhu Ulakin Purak
Kantu Kaamuruvar Katrarin Thaar
Their joy is joy of all the world, they see; thus moreThe learners learn to love their cherished lore
மு. வரதராசனார்தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
சாலமன் பாப்பையாதம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
மு. கருணாநிதி (கலைஞர்)தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்
English explanationThe learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
Ketil Vizhuchchelvam Kalvi Yoruvarku
Maatalla Matrai Yavai
Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy
மு. வரதராசனார்ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.
சாலமன் பாப்பையாகல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.
மு. கருணாநிதி (கலைஞர்)கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை
English explanationLearning is the true imperishable riches; all other things are not riches