செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
Selvaththut Selvanj Chevichchelvam Achchelvam
Selvaththu Lellaan Thalai
Wealth of wealth is wealth acquired be ear attent; Wealth mid all wealth supremely excellent
மு. வரதராசனார்செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் செல்வமாகும், அச் செல்வம் செல்வங்கள் எல்லாவற்றிலும் தலையானதாகும்.
சாலமன் பாப்பையாசெவியால் கேட்டுப் பெறும் செல்வமே சிறந்த செல்வம்; இது பிற செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
மு. கருணாநிதி (கலைஞர்)செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்
English explanationWealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
Sevikkuna Villaadha Pozhdhu Siridhu
Vayitrukkum Eeyap Patum
When 'tis no longer time the listening ear to feedWith trifling dole of food supply the body's need
மு. வரதராசனார்செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
சாலமன் பாப்பையாசெவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.
மு. கருணாநிதி (கலைஞர்)செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்
English explanationWhen there is no food for the ear, give a little also to the stomach
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
Seviyunavir Kelvi Yutaiyaar Aviyunavin
Aandraaro Toppar Nilaththu
Who feed their ear with learned teachings rare, Are like the happy gods oblations rich who share
மு. வரதராசனார்செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையாசெவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
மு. கருணாநிதி (கலைஞர்)குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்
English explanationThose who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai
Though learning none hath he, yet let him hear alway:In weakness this shall prove a staff and stay
மு. வரதராசனார்நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.
சாலமன் பாப்பையாகல்லாதவனே என்றாலும் கற்றவர் கூறும் சிறந்த செய்திகளைக் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்பது அவனுக்கு நெருக்கடி வரும்போது பிடிப்பதற்கு ஏற்ற துணையாக உதவும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்
English explanationAlthough a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
Izhukkal Utaiyuzhi Ootrukkol Atre
Ozhukka Mutaiyaarvaaich Chol
Like staff in hand of him in slippery ground who straysAre words from mouth of those who walk in righteous ways
மு. வரதராசனார்ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
சாலமன் பாப்பையாகற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.
மு. கருணாநிதி (கலைஞர்)வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்
English explanationThe words of the good are like a staff in a slippery place
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum
Aandra Perumai Tharum
Let each man good things learn, for e'en as heShall learn, he gains increase of perfect dignity
மு. வரதராசனார்எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
சாலமன் பாப்பையாசிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்
English explanationLet a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa
Rizhaiththunarn Theentiya Kelvi Yavar
Not e'en through inadvertence speak they foolish word, With clear discerning mind who've learning's ample lessons heard
மு. வரதராசனார்நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
சாலமன் பாப்பையாநுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
மு. கருணாநிதி (கலைஞர்)எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்
English explanationNot even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
Where teaching hath not oped the learner's ear, The man may listen, but he scarce can hear
மு. வரதராசனார்கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையாகேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
மு. கருணாநிதி (கலைஞர்)இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
English explanationThe ear which has not been bored by instruction, although it hears, is deaf
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
Nunangiya Kelviya Rallaar Vanangiya
Vaayina Raadhal Aridhu
'Tis hard for mouth to utter gentle, modest word, When ears discourse of lore refined have never heard
மு. வரதராசனார்நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையாநுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
மு. கருணாநிதி (கலைஞர்)தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது
English explanationIt is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
Seviyir Suvaiyunaraa Vaayunarvin Maakkal
Aviyinum Vaazhinum En?
His mouth can taste, but ear no taste of joy can give!What matter if he die, or prosperous live
மு. வரதராசனார்செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன, உயிரோடு வாழ்ந்தாலும் என்ன.
சாலமன் பாப்பையாசெவியால் நுகரப்படும் சுவைகளை உணராமல், வாயால் அறியப்படும் சுவைகளை மட்டுமே அறியும் மனிதர் இருந்தால் என்ன? இறந்தால்தான் என்ன?
மு. கருணாநிதி (கலைஞர்)செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்
English explanationWhat does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?