மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
Mikinum Kuraiyinum Noiseyyum Noolor
Valimudhalaa Enniya Moondru
The learned books count three, with wind as first; of these, As any one prevail, or fail; 'twill cause disease
மு. வரதராசனார்மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலேத்துமம் என எண்ணிய மூன்று அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.
சாலமன் பாப்பையாமருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும்.
மு. கருணாநிதி (கலைஞர்)வாதம், பித்தம், சிலேத்துமம் என்று மருத்துவ நூலோர் கணித்துள்ள மூன்றில் ஒன்று அளவுக்கு அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்
English explanationIf (food and work are either) excessive or deficient, the three things enumerated by (medical) writers, flatulence, biliousness, and phlegm, will cause (one) disease
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
Marundhena Ventaavaam Yaakkaikku Arundhiyadhu
Atradhu Potri Unin
No need of medicine to heal your body's pain, If, what you ate before digested well, you eat again
மு. வரதராசனார்முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையாஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை
English explanationNo medicine is necessary for him who eats after assuring (himself) that what he has (already) eaten has been digested
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
Atraal Aravarindhu Unka Aqdhutampu
Petraan Netidhuykkum Aaru
Who has a body gained may long the gift retain, If, food digested well, in measure due he eat again
மு. வரதராசனார்முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும், அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.
சாலமன் பாப்பையாமுன்பு உண்டது சீரணமாகிவிட்டது தெரிந்தால், அடுத்து உண்பதைத் தேவையான அளவு அறிந்து உண்க; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பைப் பெற்றவன் அதை நெடுங்காலம் கொண்டு செல்லும் வழி.
மு. கருணாநிதி (கலைஞர்)உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்
English explanationIf (one's food has been) digested let one eat with moderation; (for) that is the way to prolong the life of an embodied soul
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
Atradhu Arindhu Kataippitiththu Maaralla
Thuykka Thuvarap Pasiththu
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree
மு. வரதராசனார்முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
சாலமன் பாப்பையாமுன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
மு. கருணாநிதி (கலைஞர்)உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்
English explanation(First) assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable (to you)
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
Maarupaatu Illaadha Unti Maruththunnin
Oorupaatu Illai Uyirkku
With self-denial take the well-selected meal; So shall thy frame no sudden sickness feel
மு. வரதராசனார்மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையாஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
மு. கருணாநிதி (கலைஞர்)உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை
English explanationThere will be no disaster to one's life if one eats with moderation, food that is not disagreeable
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi
On modest temperance as pleasures pure, So pain attends the greedy epicure
மு. வரதராசனார்குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
சாலமன் பாப்பையாகுறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
மு. கருணாநிதி (கலைஞர்)அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதம் இயற்கை
English explanationAs pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
Theeyala Vandrith Theriyaan Peridhunnin
Noyala Vindrip Patum
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains
மு. வரதராசனார்பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
சாலமன் பாப்பையாதன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்
English explanationHe will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health)
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
Noinaati Noimudhal Naati Adhudhanikkum
Vaainaati Vaaippach Cheyal
Disease, its cause, what may abate the ill:Let leech examine these, then use his skill
மு. வரதராசனார்நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
சாலமன் பாப்பையாநோயாளியின் உடல்மாற்றங்களால் வந்துள்ள நோயை இன்னது என்று அறிந்து அந்த நோய் வருவதற்கான மூல காரணத்தையும் அதைத் தீர்க்கும் வழியையும் அறிந்து அதைப் போக்குவதில் தவறு வந்துவிடாமல் மருத்துவர் செயல்பட வேண்டும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)
English explanationLet the physician enquire into the (nature of the) disease, its cause and its method of cure and treat it faithfully according to (medical rule)
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal
The habitudes of patient and disease, the crises of the illThese must the learned leech think over well, then use his skill
மு. வரதராசனார்மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையாமருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்
English explanationThe learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து.
Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru
Appaal Naar Kootre Marundhu
For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide
மு. வரதராசனார்நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையாநோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது
English explanationMedical science consists of four parts, viz, patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions