அதிகாரம் 23 · ஈகை

குறள் 230

உரை
சொல்லடைவு
குறள் 230

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.

Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai
'Tis bitter pain to die, 'Tis worse to live.For him who nothing finds to give
மு. வரதராசனார்

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

மு. கருணாநிதி (கலைஞர்)

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது

English explanation

Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised

முழு அதிகாரம்: ஈகை

Kural text, commentaries and English: tk120404/thirukkural (Apache License 2.0, see data/thirukkural-LICENSE.txt). Parimelazhagar's commentary: Project Madurai PDF.