சொல்லடைவு · Word index
இடும்பை
10 முறை வருகிறது · occurs 10 times in 9 kurals
-
குறள் 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 14. ஒழுக்கம் உடைமை -
குறள் 508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 623
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 892
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். 107. இரவச்சம்