சொல்லடைவு · Word index
இன்பம்
18 முறை வருகிறது · occurs 18 times in 18 kurals
-
குறள் 39
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. 4. அறன் வலியுறுத்தல் -
குறள் 65
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 7. மக்கட்பேறு -
குறள் 98
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். 10. இனியவை கூறல் -
குறள் 156
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 16. பொறையுடைமை -
குறள் 228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். 23. ஈகை -
குறள் 352
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 36. மெய்யுணர்தல் -
குறள் 369
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 37. அவா அறுத்தல் -
குறள் 501
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். 51. தெரிந்து தெளிதல் -
குறள் 615
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். 62. ஆள்வினை உடைமை -
குறள் 628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 630
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 63. இடுக்கண் அழியாமை -
குறள் 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 67. வினைத்திட்பம் -
குறள் 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 86. இகல் -
குறள் 869
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். 87. பகை மாட்சி -
குறள் 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். 106. இரவு -
குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. 117. படர்மெலிந் திரங்கல் -
குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 133. ஊடலுவகை