சொல்லடைவு · Word index

இல்லை

22 முறை வருகிறது · occurs 22 times in 22 kurals
  1. குறள் 32 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
    மறத்தலின் ஊங்கில்லை கேடு.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 59 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  3. குறள் 61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
    மக்கட்பேறு அல்ல பிற.
    7. மக்கட்பேறு
  4. குறள் 135 அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.
    14. ஒழுக்கம் உடைமை
  5. குறள் 170 அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
    பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
    17. அழுக்காறாமை
  6. குறள் 231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
    ஊதியம் இல்லை உயிர்க்கு.
    24. புகழ்
  7. குறள் 245 அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
    மல்லன்மா ஞாலங் கரி.
    25. அருளுடைமை
  8. குறள் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
    இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
    25. அருளுடைமை
  9. குறள் 252 பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
    ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
    26. புலால் மறுத்தல்
  10. குறள் 300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
    வாய்மையின் நல்ல பிற.
    30. வாய்மை
  11. குறள் 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
    இல்லை நிலக்குப் பொறை.
    57. வெருவந்த செய்யாமை
  12. குறள் 710 நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
    கண்ணல்லது இல்லை பிற.
    71. குறிப்பறிதல்
  13. குறள் 751 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
    பொருளல்லது இல்லை பொருள்.
    76. பொருள் செயல்வகை
  14. குறள் 842 அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
    இல்லை பெறுவான் தவம்.
    85. புல்லறிவாண்மை
  15. குறள் 945 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
    95. மருந்து
  16. குறள் 951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.
    96. குடிமை
  17. குறள் 976 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
    பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு.
    98. பெருமை
  18. குறள் 1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.
    104. உழவு
  19. குறள் 1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
    திருநுதற்கு இல்லை இடம்.
    113. காதற் சிறப்புரைத்தல்
  20. குறள் 1131 காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
    மடலல்லது இல்லை வலி.
    114. நாணுத் துறவுரைத்தல்
  21. குறள் 1168 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
    என்னல்லது இல்லை துணை.
    117. படர்மெலிந் திரங்கல்
  22. குறள் 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
    வல்லது அவர்அளிக்கு மாறு.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இல்லை”

“இ” சொற்கள் அனைத்தும்