சொல்லடைவு · Word index
ஒற்று
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. 59. ஒற்றாடல் -
குறள் 585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. 59. ஒற்றாடல் -
குறள் 586
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. 59. ஒற்றாடல் -
குறள் 587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. 59. ஒற்றாடல்