சொல்லடைவு · Word index

கெடும்

28 முறை வருகிறது · occurs 28 times in 28 kurals
  1. குறள் 109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
    ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
    11. செய்ந்நன்றியறிதல்
  2. குறள் 134 மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
    17. அழுக்காறாமை
  4. குறள் 176 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
    பொல்லாத சூழக் கெடும்.
    18. வெஃகாமை
  5. குறள் 283 களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
    ஆவது போலக் கெடும்.
    29. கள்ளாமை
  6. குறள் 435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்.
    44. குற்றங்கடிதல்
  7. குறள் 437 செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்.
    44. குற்றங்கடிதல்
  8. குறள் 448 இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.
    45. பெரியாரைத் துணைக்கோடல்
  9. குறள் 466 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
    செய்யாமை யானுங் கெடும்.
    47. தெரிந்து செயல்வகை
  10. குறள் 474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
    வியந்தான் விரைந்து கெடும்.
    48. வலியறிதல்
  11. குறள் 479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
    இல்லாகித் தோன்றாக் கெடும்.
    48. வலியறிதல்
  12. குறள் 480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
    வளவரை வல்லைக் கெடும்.
    48. வலியறிதல்
  13. குறள் 548 எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
    தண்பதத்தான் தானே கெடும்.
    55. செங்கோன்மை
  14. குறள் 553 நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாடொறும் நாடு கெடும்.
    56. கொடுங்கோன்மை
  15. குறள் 563 வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
    ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  16. குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  17. குறள் 566 கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
    நீடின்றி ஆங்கே கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  18. குறள் 569 செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
    வெருவந்து வெய்து கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
  19. குறள் 601 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
    மாசூர மாய்ந்து கெடும்.
    61. மடி இன்மை
  20. குறள் 609 குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
    மடியாண்மை மாற்றக் கெடும்.
    61. மடி இன்மை
  21. குறள் 614 தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.
    62. ஆள்வினை உடைமை
  22. குறள் 622 வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
    உள்ளத்தின் உள்ளக் கெடும்.
    63. இடுக்கண் அழியாமை
  23. குறள் 763 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.
    77. படை மாட்சி
  24. குறள் 899 ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.
    90. பெரியாரைப் பிழையாமை
  25. குறள் 1028 குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.
    103. குடிசெயல் வகை
  26. குறள் 1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
    எல்லாம் ஒருங்கு கெடும்.
    106. இரவு
  27. குறள் 1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
    உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
    107. இரவச்சம்
  28. குறள் 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
    சினைப்பது போன்று கெடும்.
    121. நினைந்தவர் புலம்பல்
“க” சொற்கள் அனைத்தும்