சொல்லடைவு · Word index

செயல்

22 முறை வருகிறது · occurs 22 times in 22 kurals
  1. குறள் 33 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 67 தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்.
    7. மக்கட்பேறு
  3. குறள் 316 இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கண் செயல்.
    32. இன்னா செய்யாமை
  4. குறள் 318 தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க்கு இன்னா செயல்.
    32. இன்னா செய்யாமை
  5. குறள் 333 அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்.
    34. நிலையாமை
  6. குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
    ஊதியமும் சூழ்ந்து செயல்.
    47. தெரிந்து செயல்வகை
  7. குறள் 471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
    துணைவலியும் தூக்கிச் செயல்.
    48. வலியறிதல்
  8. குறள் 489 எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்.
    49. காலமறிதல்
  9. குறள் 516 செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
    எய்த உணர்ந்து செயல்.
    52. தெரிந்து வினையாடல்
  10. குறள் 518 வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
    அதற்குரிய னாகச் செயல்.
    52. தெரிந்து வினையாடல்
  11. குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
    64. அமைச்சு
  12. குறள் 664 சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.
    67. வினைத்திட்பம்
  13. குறள் 668 கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கங் கடிந்து செயல்.
    67. வினைத்திட்பம்
  14. குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
    செல்லும்வாய் நோக்கிச் செயல்.
    68. வினை செயல்வகை
  15. குறள் 675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
    இருள்தீர எண்ணிச் செயல்.
    68. வினை செயல்வகை
  16. குறள் 676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
    படுபயனும் பார்த்துச் செயல்.
    68. வினை செயல்வகை
  17. குறள் 832 பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கட் செயல்.
    84. பேதைமை
  18. குறள் 894 கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்.
    90. பெரியாரைப் பிழையாமை
  19. குறள் 905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
    நல்லார்க்கு நல்ல செயல்.
    91. பெண்வழிச் சேறல்
  20. குறள் 948 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல்.
    95. மருந்து
  21. குறள் 949 உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
    கற்றான் கருதிச் செயல்.
    95. மருந்து
  22. குறள் 975 பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
    அருமை உடைய செயல்.
    98. பெருமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “செயல்”

“ச” சொற்கள் அனைத்தும்