சொல்லடைவு · Word index
தலை
21 முறை வருகிறது · occurs 21 times in 21 kurals
-
குறள் 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 1. கடவுள் வாழ்த்து -
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 5. இல்வாழ்க்கை -
குறள் 47
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 5. இல்வாழ்க்கை -
குறள் 57
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 6. வாழ்க்கைத் துணைநலம் -
குறள் 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 16. பொறையுடைமை -
குறள் 295
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. 30. வாய்மை -
குறள் 317
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 32. இன்னா செய்யாமை -
குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 33. கொல்லாமை -
குறள் 325
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. 33. கொல்லாமை -
குறள் 411
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 42. கேள்வி -
குறள் 444
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. 49. காலமறிதல் -
குறள் 579
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 58. கண்ணோட்டம் -
குறள் 657
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 66. வினைத் தூய்மை -
குறள் 687
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 69. தூது -
குறள் 736
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. 74. நாடு -
குறள் 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. 77. படை மாட்சி -
குறள் 814
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. 82. தீ நட்பு -
குறள் 852
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. 86. இகல் -
குறள் 891
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. 90. பெரியாரைப் பிழையாமை -
குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. 104. உழவு