சொல்லடைவு · Word index
வேண்டும்
15 முறை வருகிறது · occurs 15 times in 14 kurals
-
குறள் 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 3. நீத்தார் பெருமை -
குறள் 178
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 18. வெஃகாமை -
குறள் 257
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 26. புலால் மறுத்தல் -
குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். 32. இன்னா செய்யாமை -
குறள் 362
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 37. அவா அறுத்தல் -
குறள் 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 49. காலமறிதல் -
குறள் 611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 62. ஆள்வினை உடைமை -
குறள் 652
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 66. வினைத் தூய்மை -
குறள் 653
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். 66. வினைத் தூய்மை -
குறள் 667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 67. வினைத்திட்பம் -
குறள் 960
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. 96. குடிமை -
குறள் 963
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 97. மானம் -
குறள் 1060
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. 106. இரவு -
குறள் 1282
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். 129. புணர்ச்சி விதும்பல்