இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
Insolaal Eeram Alaiip Patiruilavaam
Semporul Kantaarvaaich Chol
Pleasant words are words with all pervading love that burn; Words from his guileless mouth who can the very truth discern
மு. வரதராசனார்அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
சாலமன் பாப்பையாஅறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
மு. கருணாநிதி (கலைஞர்)ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்
English explanationSweet words are those which imbued with love and free from deceit flow from the mouth of the virtuous
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
A pleasant word with beaming smile's preferred, Even to gifts with liberal heart conferred
மு. வரதராசனார்முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
சாலமன் பாப்பையாமுகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
மு. கருணாநிதி (கலைஞர்)முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
English explanationSweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind
முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
Mukaththaan Amarndhuinidhu Nokki Akaththaanaam
Inso Linadhe Aram
With brightly beaming smile, and kindly light of loving eye, And heart sincere, to utter pleasant words is charity
மு. வரதராசனார்முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.
சாலமன் பாப்பையாபிறரைப் பார்க்கும்போது முகத்தால் விரும்பி, இனிமையாகப் பார்த்து, உள்ளத்துள் இருந்து வரும் இனிய சொற்களைச் சொல்வதே அறம் ஆகும்.
மு. கருணாநிதி (கலைஞர்)முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்
English explanationSweet speech, flowing from the heart (uttered) with a cheerful countenance and a sweet look, is true virtue
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
Thunpurooum Thuvvaamai Illaakum Yaarmaattum
Inpurooum Inso Lavarkku
The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found
மு. வரதராசனார்யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.
சாலமன் பாப்பையாஎவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.
மு. கருணாநிதி (கலைஞர்)இன்சொல் பேசி எல்லோரிடத்திலும் கனிவுடன் பழகுவோர்க்கு `நட்பில் வறுமை' எனும் துன்பமில்லை
English explanationSorrow-increasing poverty shall not come upon those who use towards all, pleasure-increasing sweetness of speech
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
மற்றுப் பிற.
Panivutaiyan Insolan Aadhal Oruvarku
Aniyalla Matrup Pira
Humility with pleasant speech to man on earth, Is choice adornment; all besides is nothing worth
மு. வரதராசனார்வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையாதகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
மு. கருணாநிதி (கலைஞர்)அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது
English explanationHumility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments)
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
Allavai Theya Aramperukum Nallavai
Naati Iniya Solin
Who seeks out good, words from his lips of sweetness flow; In him the power of vice declines, and virtues grow
மு. வரதராசனார்பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையாபிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
மு. கருணாநிதி (கலைஞர்)தீய செயல்களை அகற்றி அறநெறி தழைக்கச் செய்ய வேண்டுமானால், இனிய சொற்களைப் பயன்படுத்தி நல்வழி எதுவெனக் காட்ட வேண்டும்
English explanationIf a man, while seeking to speak usefully, speaks also sweetly, his sins will diminish and his virtue increase
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
Nayan Eendru Nandri Payakkum
Payaneendru Panpin Thalaippiriyaach Chol
The words of sterling sense, to rule of right that strict adhere, To virtuous action prompting, blessings yield in every sphere
மு. வரதராசனார்பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையாபிறர்க்கு நன்மையைத் தந்து, இனிய பண்பிலிருந்து விலகாத சொல், இம்மைக்கு உலகத்தாரோடு ஒற்றுமையையும், மறுமைக்கு அறத்தையும் கொடுக்கும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நன்மையான பயனைத் தரக்கூடிய நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவைகளாகும்
English explanationThat speech which, while imparting benefits ceases not to please, will yield righteousness (for this world) and merit (for the next world)
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum
Sweet kindly words, from meanness free, delight of heart, In world to come and in this world impart
மு. வரதராசனார்பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும் .
சாலமன் பாப்பையாபிறர்க்கு மனத்துன்பம் தராத இனிய சொல் ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.
மு. கருணாநிதி (கலைஞர்)சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்
English explanationSweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
Who sees the pleasure kindly speech affords, Why makes he use of harsh, repellant words
மு. வரதராசனார்இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையாபிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
மு. கருணாநிதி (கலைஞர்)இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
English explanationWhy does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
Iniya Ulavaaka Innaadha Kooral
Kaniiruppak Kaaikavarn Thatru
When pleasant words are easy, bitter words to use, Is, leaving sweet ripe fruit, the sour unripe to choose
மு. வரதராசனார்இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
சாலமன் பாப்பையாமனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
மு. கருணாநிதி (கலைஞர்)இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்
English explanationTo say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe