பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
Pallaar Muniyap Payanila Solluvaan
Ellaarum Ellap Patum
Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise
மு. வரதராசனார்கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்
சாலமன் பாப்பையாபலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.
மு. கருணாநிதி (கலைஞர்)பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லோரும் இகழ்ந்துரைப்பார்கள்
English explanationHe who to the disgust of many speaks useless things will be despised by all
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
Payanila Pallaarmun Sollal Nayanila
Nattaarkan Seydhalir Reedhu
Words without sense, where many wise men hear, to pourThan deeds to friends ungracious done offendeth more
மு. வரதராசனார்பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையாஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.
மு. கருணாநிதி (கலைஞர்)பலர்முன் பயனில்லாத சொற்களைக் கூறுவது, நட்புக்கு மாறாகச் செயல்படுவதைக் காட்டிலும் தீமையுடையதாகும்
English explanationTo speak useless things in the presence of many is a greater evil than to do unkind things towards friends
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
Nayanilan Enpadhu Sollum Payanila
Paarith Thuraikkum Urai
Diffusive speech of useless words proclaimsA man who never righteous wisdom gains
மு. வரதராசனார்ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.
சாலமன் பாப்பையாபயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.
மு. கருணாநிதி (கலைஞர்)பயனற்றவைகளைப்பற்றி ஒருவன் விரிவாகப் பேசிக் கொண்டிருப்பதே அவனைப் பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்
English explanationThat conversation in which a man utters forth useless things will say of him "he is without virtue."
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap
Panpilsol Pallaa Rakaththu
Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good
மு. வரதராசனார்பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.
சாலமன் பாப்பையாபயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.
மு. கருணாநிதி (கலைஞர்)பயனற்றதும், பண்பற்றதுமான சொற்களைப் பலர்முன் பகர்தல் மகிழ்ச்சியைக் குலைத்து, நன்மையை மாய்க்கும்
English explanationThe words devoid of profit or pleasure which a man speaks will, being inconsistent with virtue,
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin
Gone are both fame and boasted excellence, When men of worth speak of words devoid of sense
மு. வரதராசனார்பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையாஇனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.
மு. கருணாநிதி (கலைஞர்)நல்ல பண்புடையவர் பயனில்லாத சொற்களைக் கூறுவாரானால் அவருடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கி விடும்
English explanationIf the good speak vain words their eminence and excellence will leave them
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
Payanil Sol Paaraattu Vaanai
Makanenal Makkat Padhati Yenal
Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity
மு. வரதராசனார்பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
சாலமன் பாப்பையாபயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.
மு. கருணாநிதி (கலைஞர்)பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்
English explanationCall not him a man who parades forth his empty words Call him the chaff of men
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
Nayanila Sollinunj Cholluka Saandror
Payanila Sollaamai Nandru
Let those who list speak things that no delight afford,'Tis good for men of worth to speak no idle word
மு. வரதராசனார்அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.
சாலமன் பாப்பையாநீதியற்ற சொற்களைச் சொன்னாலும் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது சான்றோர்க்கு நல்லது.
மு. கருணாநிதி (கலைஞர்)பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது
English explanationLet the wise if they will, speak things without excellence; it will be well for them not to speak useless things
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
Arumpayan Aayum Arivinaar Sollaar
Perumpayan Illaadha Sol
The wise who weigh the worth of every utterance, Speak none but words of deep significance
மு. வரதராசனார்அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்
சாலமன் பாப்பையாஅரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.
மு. கருணாநிதி (கலைஞர்)அரும்பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய ஆற்றல் படைத்தவர், பெரும்பயன் விளைவிக்காத எந்தச் சொல்லையும் பயன்படுத்த மாட்டார்
English explanationThe wise who seek after rare pleasures will not speak words that have not much weight in them
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
Poruldheerndha Pochchaandhunj Chollaar Maruldheerndha
Maasaru Kaatchi Yavar
The men of vision pure, from wildering folly free, Not e'en in thoughtless hour, speak words of vanity
மு. வரதராசனார்மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர், பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.
சாலமன் பாப்பையாமயக்கமற்ற தூய அறிவினை உடையவர், பொருளற்ற சொற்களை மறந்தும் சொல்லார்.
மு. கருணாநிதி (கலைஞர்)மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்
English explanationThose wise men who are without faults and are freed from ignorance will not even forgetfully speak things that profit not
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol
If speak you will, speak words that fruit afford, If speak you will, speak never fruitless word
மு. வரதராசனார்சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
சாலமன் பாப்பையாசொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.
மு. கருணாநிதி (கலைஞர்)பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்
English explanationSpeak what is useful, and speak not useless words