சொல்லடைவு · Word index

பவர்

19 முறை வருகிறது · occurs 19 times in 19 kurals
  1. குறள் 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
    16. பொறையுடைமை
  2. குறள் 172 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
    நடுவன்மை நாணு பவர்.
    18. வெஃகாமை
  3. குறள் 173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
    மற்றின்பம் வேண்டு பவர்.
    18. வெஃகாமை
  4. குறள் 320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்.
    32. இன்னா செய்யாமை
  5. குறள் 464 தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
    ஏதப்பாடு அஞ்சு பவர்.
    47. தெரிந்து செயல்வகை
  6. குறள் 485 காலம் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலம் கருது பவர்.
    49. காலமறிதல்
  7. குறள் 562 கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
    நீங்காமை வேண்டு பவர்.
    57. வெருவந்த செய்யாமை
  8. குறள் 580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
    நாகரிகம் வேண்டு பவர்.
    58. கண்ணோட்டம்
  9. குறள் 602 மடியை மடியா ஒழுகல் குடியைக்
    குடியாக வேண்டு பவர்.
    61. மடி இன்மை
  10. குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
    62. ஆள்வினை உடைமை
  11. குறள் 779 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
    பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
    78. படைச் செருக்கு
  12. குறள் 906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
    அமையார்தோள் அஞ்சு பவர்.
    91. பெண்வழிச் சேறல்
  13. குறள் 908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
    பெட் டாங்கு ஒழுகு பவர்.
    91. பெண்வழிச் சேறல்
  14. குறள் 926 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
    நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
    93. கள்ளுண்ணாமை
  15. குறள் 927 உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
    கள்ளொற்றிக் கண்சாய் பவர்
    93. கள்ளுண்ணாமை
  16. குறள் 962 சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
    பேராண்மை வேண்டு பவர்.
    97. மானம்
  17. குறள் 1017 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
    102. நாணுடைமை
  18. குறள் 1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.
    104. உழவு
  19. குறள் 1165 துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
    நட்பினுள் ஆற்று பவர்.
    117. படர்மெலிந் திரங்கல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “பவர்”

“ப” சொற்கள் அனைத்தும்